/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : அக் 09, 2025 10:19 PM
திருவள்ளூர்:வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், இன்று நடக்கும் என, திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடக்கிறது.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


