Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு

ADDED : பிப் 29, 2024 07:13 PM


Google News
Latest Tamil News
பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் நேரடி பேருந்து சேவைகள் இல்லாததால், அரசு போக்குவரத்து கழத்தின் வாயிலாக, பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் வழியாக தத்தமஞ்சி மற்றும் ஊரணம்பேடு ஆகிய கிராமங்களுக்கு, டி27, டி29, டி44 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாநகர பேருந்து, தடம் எண்: 556 என்ற அரசு பேருந்து, திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர், பொன்னேரி வழியாக பழவேற்காடு வரை, தினமும் இரண்டு முறை இயக்கப்படுகிறது.

பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து, மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கல்லுாரியில் படிக்க, நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பொன்னேரி வந்து செல்கின்றனர்.

இந்த வழித்தடத்தில், மேற்கண்ட நான்கு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வரும் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டி நிலையில் உள்ளனர். அவற்றிலும் நெரிசலுடனும், படிகட்டுகளில் தொங்கி பயணிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, காலை - மாலை நேரங்களில் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதை பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்கள், 20 - 30 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, மாணவர்கள் மற்றும் கிராமவாசிகளின் நலன் கருதி, பொன்னேரி - மீஞ்சூர் இடையே நேரடி பேருந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us