/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி கோவில் விடுதிகளில் கூடுதல் கழிப்பறை வசதி திருத்தணி கோவில் விடுதிகளில் கூடுதல் கழிப்பறை வசதி
திருத்தணி கோவில் விடுதிகளில் கூடுதல் கழிப்பறை வசதி
திருத்தணி கோவில் விடுதிகளில் கூடுதல் கழிப்பறை வசதி
திருத்தணி கோவில் விடுதிகளில் கூடுதல் கழிப்பறை வசதி
ADDED : மார் 21, 2025 02:53 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லம் என்ற தேவஸ்தான விடுதி உள்ளது. இங்கு இருந்து முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், விடுதிகளில் அறைகள் கிடைக்காத பக்தர்கள் அங்கேயே தங்கியிருந்து கோவிலுக்கு சென்று வருகின்றனர். பேருந்துக்காக காத்திருக்கும் பக்தர்கள் மற்றும் அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தான விடுதியில் ஆண், பெண்கள் என தனித்தனியாக தலா நான்கு கழிப்பறைகள் மற்றும் குளியல் அறைகள் ஏற்படுத்தியுள்ளன.
தற்போது பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி, அதே பகுதியில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக எட்டு கழிப்பறைகள் ஏற்படுத்த தீர்மானித்து தற்போது கட்டடப்பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
அதே போல், மலைக்கோவில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தமிடத்திலும், குடிநீர் தொட்டி அருகே, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு கழிப்பறைகள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.
★★