/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆசிய மாஸ்டர் தடகளம் நவ., 5ல் துவக்கம் ஆசிய மாஸ்டர் தடகளம் நவ., 5ல் துவக்கம்
ஆசிய மாஸ்டர் தடகளம் நவ., 5ல் துவக்கம்
ஆசிய மாஸ்டர் தடகளம் நவ., 5ல் துவக்கம்
ஆசிய மாஸ்டர் தடகளம் நவ., 5ல் துவக்கம்
ADDED : அக் 09, 2025 03:04 AM
சென்னை, சென்னையில், 50 நாடுகள் பங்கேற்கும், ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி, நவ., 5ம் தேதி துவங்குகிறது.
இந்திய மாஸ்டர் தடகள கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாஸ்டர் தடகள சங்கம் சார்பில், ஆசிய அளவில் மாஸ்டர் தடகளம் - 2025 சாம்பியன்ஷிப் போட்டி, நவ., 5ல் துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது.
போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், இந்தியா உட்பட 50 ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் ஆதரவில் போட்டியை நடத்த பேச்சு நடத்தப்பட்டு வருவதாக, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


