ADDED : செப் 23, 2025 10:32 PM
ஊத்துக்கோட்டை:பென்னலுார் பேட்டையில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்குடைக்கு பூமி பூஜை நடந்தது.
பூண்டி ஒன்றியம் பென்னலுார்பேட்டை ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், வெயில், மழையில் நனைந்து வந்தனர். ஏற்கனவே இருந்த நிழற்குடை சேதமடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பயணியர் நிழற்குடைக்கு பூமி பூஜை நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலர் பொன்னுசாமி தலைமையில், எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார்.