ADDED : ஜன 27, 2024 11:22 PM
பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்த யூசப் பாய் என்பவரின் பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம், கடந்த 2021ல் திருடு போனது.
இது குறித்து யூசப் பாய், பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், நேற்று ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்த பச்சையப்பன், 54, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.