/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பஸ் நிலைய கட்டுமான பணி விறுவிறு பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பஸ் நிலைய கட்டுமான பணி விறுவிறு
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பஸ் நிலைய கட்டுமான பணி விறுவிறு
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பஸ் நிலைய கட்டுமான பணி விறுவிறு
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பஸ் நிலைய கட்டுமான பணி விறுவிறு
ADDED : செப் 25, 2025 08:00 PM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, மேல் பொதட்டூர், வாணிவிலாசபுரம், சவுட்டூர், புதுார், பொதட்டூர்பேட்டை காலனி உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
மேலும், பொதட்டூர்பேட்டையை ஒட்டிய சொரக்காய்பேட்டை, மேலப்பூடி, கீழப்பூடி, ஸ்ரீகாவேரிராஜபுரம், பொம்மராஜபேட்டை, காக்களூர், ஈச்சம்தோப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும், பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி, வேலுார், புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுதவிர பொதட்டூர்பேட்டையில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு திருத்தணி, அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.
அதாவது, தினமும் ஆயிரக்கணக்கானோர், பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.
கடந்த 1980ல், பேரூராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் இருந்த புளியந்தோப்பு, பேருந்து நிலையமாக செயல்பட்டு வந்தது.
அந்த தோப்பு அழிக்கப்பட்டு, அங்கு கலையரங்கம் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. இதையடுத்து, தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் உருவானது. இங்கு மிக குறுகலான நிழற்குடை மற்றும் நேரக்காப்பாளர் அறை, பாலுாட்டும் தாய்மார்கள் அறை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
ஆயிரக்கணக்கானோர் கூடும் பேருந்து நிலையத்தில் இந்த அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
இதையடுத்து, தற்போது, ரூ.1.50 கோடி மதிப்பில், ஒரே கூரையின் கீழ் பேருந்து நிழற்குடை மற்றும், 18 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய நிழற்குடையில் பேருந்துகளும் தாராளமாக நின்று செல்ல முடியும்.
இதுகுறித்து பேரூராட்சி செ யல் அலுவலர் அரிஹர கார்த்திகேயன் கூறுகையில், ''பேருந்து நிலைய கட்டுமான பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. விரைவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் திறக்கப்படும்,'' என்றார்.