Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகார் 90 நாட்களில் முடிக்க கலெக்டர் அறிவுரை

பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகார் 90 நாட்களில் முடிக்க கலெக்டர் அறிவுரை

பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகார் 90 நாட்களில் முடிக்க கலெக்டர் அறிவுரை

பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகார் 90 நாட்களில் முடிக்க கலெக்டர் அறிவுரை

ADDED : அக் 09, 2025 10:17 PM


Google News
திருவள்ளூர்:''பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்படும் பெண்கள் அளிக்கும் புகார் மீது, 90 நாட்களுக்குள் விசாரணை நடவடிக்கையை முடிக்க வேண்டும்,'' என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்புகுழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க, சட்டத்தின் அடிப்படையில், உள்ளூர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் உள்ளக குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இச்சட்டத்தின் வழியாக வரப்பெறும் விண்ணப்பங்களை, உரிய காலத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புகார்தாரர், சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். மேலும், மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள 'She - Box Portal' வழியாகவும், புகார் அளிக்கலாம்.

புகார் பெற்ற 90 நாட்களுக்குள் விசாரணை நடவடிக்கை முடிக்க வேண்டும். விசாரணை குழுவின் அறிக்கையின்படி, துறை மூலமாக அல்லது காவல் நிலையம் மூலமாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் வனிதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us