ADDED : ஜூன் 12, 2025 03:00 AM

திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சேர்ந்தவர் சரளாதேவி, 47. இவருக்கு சொந்தமான பசு மாட்டை நேற்று முன்தினம் வயல்வெளியில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். வயல்வெளியில் சென்ற மின்கம்பத்தில் இருந்து ஒரு மின் ஒயர் அறுந்து விழுந்திருந்தது.
மாலையில் சரளாதேவி பசு மாட்டை ஓட்டி வருவதற்கு சென்ற போது, பசு மாடு மின் ஒயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசு மாடு இறந்தது. பசு மாட்டின் கயிறை பிடித்த சரளாதேவிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.