/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் சாலை மறியல் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
ADDED : செப் 13, 2025 01:43 AM

மப்பேடு:மப்பேடு பகுதியில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள், நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த கூவம் ஊராட்சி, பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த தீபா, 35, மப்பேடு இந்தியன் வங்கியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் வழங்கும் பணியில், ஒப்பந்த ஊழியராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த 9ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர். தீபா இறப்பிற்கு, வங்கி நிர்வாகமே காரணமென, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
நேற்று மதியம் மப்பேடு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், வங்கியை முற்றுகையிட்டு, தங்கள் வங்கி கணக்கில் ஒப்பந்த ஊழியர் தீபா மூலம் மாயமான பணம் குறித்து, மேலாளரிடம் புகார் அளித்தனர்.
பின், வாடிக்கையாளர்கள் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவ லறிந்த மப்பேடு போலீசார் மற்றும் சென்னை இந்திய வங்கி அதிகாரி அருள்ராஜ் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.