புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆட்டோ கட்டணம் தாறுமாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி/ஆட்டோ கட்டணம் தாறுமாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
ADDED : ஜூன் 14, 2025 09:31 PM
ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தப்படாததால் பக்தர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் சிரமம் அடைகின்றனர். பெரும்பாலானோர் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்கின்றனர். அதேபோல, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பேருந்து வாயிலாக வருவோர், தேரடியில் இறங்கி ஆட்டோவில் செல்கின்றனர்.துாரத்தை பொறுத்து 20 - 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர். பக்தர்களுடன் பேரம் பேசி வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், பக்தர்கள் ஆட்டோக்களை தவிர்த்து நடந்து செல்கின்றனர்.எனவே, போக்குவரத்து துறை மற்றும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.