Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தோட்டக்கலை மேலாண் நிலையத்தில் 11 இடத்திற்கு நேரடி மாணவர் சேர்க்கை

தோட்டக்கலை மேலாண் நிலையத்தில் 11 இடத்திற்கு நேரடி மாணவர் சேர்க்கை

தோட்டக்கலை மேலாண் நிலையத்தில் 11 இடத்திற்கு நேரடி மாணவர் சேர்க்கை

தோட்டக்கலை மேலாண் நிலையத்தில் 11 இடத்திற்கு நேரடி மாணவர் சேர்க்கை

ADDED : அக் 11, 2025 08:11 PM


Google News
திருவள்ளூர்:மாதவரம் தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில், காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மாதவரம் தோட்டக்கலை மேலாண்மை நிலைய முதல்வர் மற்றும் துணை இயக்குநர் சாந்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் அரசு உதவி பெறும் உறுப்பு கல்லுாரிகளில் ஒன்றான மாதவரம் தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில், காலியாக உள்ள 11 இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை, வரும் 15 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள், அன்றைய தினங்களில் மாதவரம், பால் பண்ணை சாலையில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தை நேரில் அணுகலாம்.

பட்டய படிப்பிற்கான கலந்தாய்வில் ஏற்கனவே பங்கேற்காதோர், கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்று சான்றிதழ் சரிபார்ப்பை தவறவிட்டோர் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, கல்லுாரியில் சேராதவர்கள் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள், 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையின் போது இடம் கிடைத்தோர், சேர்க்கை கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்தி உடனடியாக கல்லுாரியில் சேரலாம்.

மேலும் விபரங்களுக்கு, 63851 16971 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us