/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வடிகால் பிரச்னை: கவுன்சிலரின் கணவர் அடித்ததாக பெண் புகார் வடிகால் பிரச்னை: கவுன்சிலரின் கணவர் அடித்ததாக பெண் புகார்
வடிகால் பிரச்னை: கவுன்சிலரின் கணவர் அடித்ததாக பெண் புகார்
வடிகால் பிரச்னை: கவுன்சிலரின் கணவர் அடித்ததாக பெண் புகார்
வடிகால் பிரச்னை: கவுன்சிலரின் கணவர் அடித்ததாக பெண் புகார்
ADDED : செப் 23, 2025 10:35 PM
திருநின்றவூர்:மழைநீர் வடிகால்வாய் துார் வாரும் பணியின்போது ஏற்பட்ட பிரச்னையில், கவுன்சிலரின் கணவர் தாக்கியதாக பெண் புகார் அளித்துள்ளார்.
திருநின்றவூர் நகராட்சி 21, 27வது வார்டு அன்னை இந்திரா நகரில், கடந்த 17ம் தேதி பெய்த கன மழையால், அப்பகுதியில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 20ம் தேதி 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜெயகுமார் என்பவர், அன்னை இந்திரா நகர் அனெக்ஸ் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்யும்போது, அ.தி.மு.க., கவுன்சிலர் அனிதா மற்றும் அவரது கணவர் அழகேசன் ஆகியோர், பணியை நிறுத்தக்கூறி வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, இருதரப்புக்கு இடையே கைகலப்பானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்பவர், கவுன்சிலரின் கணவர் தன்னை தாக்கியதாக திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது:
எங்கள் பகுதியில், மழைநீர் வடிகால் துார் வாரும் பணி, கடந்த 20ம் தேதி நடந்தது. நகராட்சி மேற்கொண்ட பணிக்கு, பகுதி மக்களும் உதவினோம், அப்போது, 21வது வார்டு கவுன்சிலரின் கணவர் அழகேசன் என்பவர் வந்து தகராறு செய்தார்.
அவர் என்னை ஒருமையில் திட்டி, கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதில் என் கன்னத்தில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நகர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவர் அன்னை இந்திரா நகர் மக்களுக்கு மழைக்காலங்களில், மழைநீர் வடிகாலில் மணல் மூட்டைகளை போட்டு இடையூறு செய்கிறார்.
அழகேசன் அவரது மனைவியின் அதிகாரத்தை பயன்படுத்தி இடையூறு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.