/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி படகு சவாரி, மலையேற்ற மேம்பாடு பணி தீவிரம் திருவள்ளூரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி படகு சவாரி, மலையேற்ற மேம்பாடு பணி தீவிரம்
திருவள்ளூரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி படகு சவாரி, மலையேற்ற மேம்பாடு பணி தீவிரம்
திருவள்ளூரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி படகு சவாரி, மலையேற்ற மேம்பாடு பணி தீவிரம்
திருவள்ளூரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி படகு சவாரி, மலையேற்ற மேம்பாடு பணி தீவிரம்
ADDED : செப் 26, 2025 03:52 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற, 2 கோடி ரூபாய் மதிப்பில் பழவேற்காட்டை சூழலியல் சுற்றுலா துறையாக்கவும், குடியம் குகையில், மலையேற்றம், திருத்தணியில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆன்மிக சுற்றுலாவாசிகளுக்கான தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
௨ கோடி ரூபாய் ஒதுக்கீடு சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கம், பழவேற்காடு கடற்கரை, குடியம் குகை, அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் என ஆன்மிக சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், காணும் பொங்கல் தினத்தன்று ஏராளமான பொதுமக்கள், பூண்டி நீர்தேக்கத்திற்கும், பழவேற்காடு கடற்கரைக்கும் சென்று, இயற்கை சூழலினை அனுபவித்து, பொழுது போக்கி வருகின்றனர்.
சென்னைக்கு மிக அருகில் இருப்பதாலும், அதிக செலவழித்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாசஸ்தலங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பழவேற்காட்டை சிறந்த சுற்றுலா சூழலியல் தலமாக மாற்ற, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளதாக அறிவித்தார்.
நவீன உணவகம் அந்த அறிவிப்புடன், பூண்டி நீர்தேக்கம் அருகில், சுற்றுலா துறை சார்பில், ஏரியை பார்வையிடும் வகையில் கொண்ட பார்வையாளர் மாடத்துடன், நவீன உணவகம் கட்டப்பட்டு உள்ளது.
அங்கு, சுற்றுலா பயணியர் மற்றும் சிறுவர்கள் இளைப் பாறும் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, நேற்று திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில், கலை நிகழ்ச்சி மற்றும் மரம் நடும் விழா நடந்தது.
மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் மேம்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பழவேற்காடு பகுதியில் சூழலியல் சுற்றுலா மேம்படுத்த 2 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாட்டு பணிகளுக்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது.
அங்கு, படகு குழாம், படகு சவாரி மற்றும் ஒரு சிறிய பொழுதுபோக்கு விளையாட்டு, 'அட்வென்ச்சர் டூரிசம்' போன்றவை எற்படுத்தப்பட உள்ளது.
கட்டுப்பாடு அதே போல், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, குடியம் குகை மிகச் சிறப்பான, பசுமையான ஒரு இடம். தமிழக அரசு சார்பில் அங்கு, 'மலையேற்றம்' தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
வனத்துறையுடன் இணைந்து, அப்பகுதியில், மலையேற்றம் வருவோருக்கான, உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தும் திட்டம், அரசின் ஆலோசனையில் உள்ளது.
இவ்விரண்டு இடங்களும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், சுற்றுலா தொடர்பாக எவ்வாறு பணிகளை மேற்கொள்ளலாம் என, தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.
தவிர, திருத்தணி முருகன் கோவிலில், ஆன்மிக சுற்றுலாவாக மாற்றும் வகையில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 5 ஏக்கர் பரப் பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சுற்றுலா துறை வாயிலாக, ஆன்மிக சுற்றுலாவுக்கான தலமாகவும், ஒரு பொழுது போக்கு பூங்கா அமைக்கவும், ஆயத்த பணி மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.