ADDED : அக் 09, 2025 10:25 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த வேலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தண்டுகான், 80. இவர் நேற்று மதியம் வயல்வெளிக்கு சென்றார். அங்குள்ள விவசாய கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிப்பதற்கு முயன்றார்.
அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார், தீயணைப்பு துறை வீரர்களுடன் சென்று, முதியவர் உடலை மீட்டனர்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


