/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தொழிற்சாலை திறப்பு; அப்பாவு பங்கேற்புதொழிற்சாலை திறப்பு; அப்பாவு பங்கேற்பு
தொழிற்சாலை திறப்பு; அப்பாவு பங்கேற்பு
தொழிற்சாலை திறப்பு; அப்பாவு பங்கேற்பு
தொழிற்சாலை திறப்பு; அப்பாவு பங்கேற்பு
ADDED : பிப் 11, 2024 11:13 PM
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 'அனலா பம்ப்ஸ்' என்ற பெயரில் புதிதாக நிறுவப்பட்ட தனியார் தொழிற்சாலையை சபாநாயகர் அப்பாவு, நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அப்பாவு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஒற்றை சாளர முறை வாயிலாக ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் புதிதாக துவங்கப்பட்டு, ஆறு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள், ஏழை வீட்டு பிள்ளைகள் படிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு தொழில் கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லை.
உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் ஒருவரருக்கு, 72,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி தேவையா? அதை நலிந்த தொழிற்சாலைகளுக்கு கொடுத்திருக்கலாம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்கிறது.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.