/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பனப்பாக்கத்தில் தடுப்பணை சேதம் புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல் பனப்பாக்கத்தில் தடுப்பணை சேதம் புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பனப்பாக்கத்தில் தடுப்பணை சேதம் புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பனப்பாக்கத்தில் தடுப்பணை சேதம் புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பனப்பாக்கத்தில் தடுப்பணை சேதம் புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2025 01:36 AM

பொன்னேரி:மேய்க்கால் நிலப்பரப்பில் தண்ணீர் தேக்கி வைத்து, பனப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளது. இதனால், மழைநீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை புதுப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கரில் உள்ள பாசன ஏரியில் தேங்கும் மழைநீரை பயன்படுத்தி, 300 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக, அதனருகே உள்ள மேய்க்கால் நிலப்பகுதியில் தடுப்ப ணை அமைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து கால்வாய் வழியாக பனப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில், தடுப்பணை ஆங்காங்கே சேதமடைந்து, 10 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், தடுப்பணை உடைப்புகள் வழியாக தண்ணீர் வெளியேறி, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரிக்கு சென்று வீணாகி வருகிறது.
இதனால், ஏரியில் முழு கொள்ளளவிற்கு மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது, பனப்பாக்கம், பெரியகரும்பூர் உள்ளிட்ட கிராமங்களில், மழைநீர் கால்வாய்கள் துார்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த பணிகளுடன், பனப்பாக்கம் ஏரி அருகே, சேதமடைந்த தடுப்பணையையும் புதுப்பிக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.