/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குப்பை மலையில் அடிக்கடி தீ வைப்பு சுற்றுச்சூழல் மாசால் மக்கள் பாதிப்பு குப்பை மலையில் அடிக்கடி தீ வைப்பு சுற்றுச்சூழல் மாசால் மக்கள் பாதிப்பு
குப்பை மலையில் அடிக்கடி தீ வைப்பு சுற்றுச்சூழல் மாசால் மக்கள் பாதிப்பு
குப்பை மலையில் அடிக்கடி தீ வைப்பு சுற்றுச்சூழல் மாசால் மக்கள் பாதிப்பு
குப்பை மலையில் அடிக்கடி தீ வைப்பு சுற்றுச்சூழல் மாசால் மக்கள் பாதிப்பு
ADDED : செப் 14, 2025 03:01 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில் உள்ள குப்பை கிடங்குகளில், அவ்வப்போது தீ வைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 65,000 பேர் வசித்து வருகின்றனர். தினமும் மட்கும் மற்றும் மட்காத குப்பை என, 40 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பை அனைத்தும், ஈக்காடு அருகே உள்ள தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்பட்டு வந்தது.
இங்கு, குப்பைகளை கொட்ட இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், தற்போது கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தலக்காஞ்சேரியில் சேகரமான குப்பையை 'பயோமைனிங்' முறையில் பிரித்து எடுக்கும் பணி, 2019ல் செயல்படுத்தப்பட்டது. ஆனால், பாதிக்கும் மேற்பட்ட குப்பை, 'பயோமைனிங்' செய்யப்பட்ட நிலையில், கொரோனா காலத்திற்கு பின், மீண்டும் செயல்படுத்தப்படவில்லை.
மலைபோல் குவிந்துள்ள குப்பையை சிலர் தீ வைத்து எரிப்பதால், புகை எழுந்து, அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த வழியாக, தலக்காஞ்சேரிக்கு செல்லும் கிராம மக்கள், அருகிலுள்ள குடியிருப்பு மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், குப்பை எரிப்பதால் சுவாச கோளாறுக்கு ஆளாகி வருகின்றனர்.