/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர அரசு... ஊக்குவிப்பு: மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர அரசு... ஊக்குவிப்பு: மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா
புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர அரசு... ஊக்குவிப்பு: மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா
புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர அரசு... ஊக்குவிப்பு: மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா
புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர அரசு... ஊக்குவிப்பு: மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா

சாலையோர வியாபாரிகளுக்காக
கடைகளாக மாறும் பஸ் நிலையம்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், 1.5 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, கடந்தாண்டு நவம்பர் மாதம், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். மாற்று இடம் கோரி, ஆக்கிரமிப்பு கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, பேருந்து நிலையத்தில், 40 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு, 60 லட்சம் ரூபாய் செலவில், 'ஷெட்' அமைத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 197 கடைகள் ஒதுக்க அரசு முடிவு செய்தது. பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கினால், பேருந்துகள் உள்ளே வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பயணியர் சிரமத்திற்கு ஆளாக கூடும் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் வகையில், தற்போது பேருந்து நிலையம் முழுவதையும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை, ஜி.என்.டி., சாலையோரம் உள்ள சங்கு ஊதும் கோபுரம் அருகே, வெறும் 15 சென்ட் பரப்பளவில் அமைக்க, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் திட்டம் தயாரித்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பேருந்து பயணியரை வஞ்சிக்கும் அரசின் நடவடிக்கை மீது, கும்மிடிப்பூண்டி பகுதிமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


