/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது
ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது
ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது
ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது
ADDED : அக் 09, 2025 11:47 PM

மீஞ்சூர்:ஒடிசா மாநிலத்தில் இருந்து, 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, சோழவரம் சுங்கச்சாவடி பகுதியில், செங்குன்றம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஒக்கியம் பகுதியை சேர்ந்த உசேன், 39, என்பது தெரிந்தது.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 5 கிலோ கஞ்சா இருப்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதும் தெரிந்தது.
போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உசேனை, கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
மற்றொரு வாலிபர் கைது
கடம்பத்துார் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக அமர்ந்திருந்த வாலிபரை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையை சேர்ந்த மஞ்சுநாத், 34, என்பது தெரிந்தது.
அவரிடமிருந்த, 2.9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 30,000 ரூபாய். மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர்.


