Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடியில் ரூ.7.29 கோடியில் புதிய பேருந்து நிலையம்

கும்மிடியில் ரூ.7.29 கோடியில் புதிய பேருந்து நிலையம்

கும்மிடியில் ரூ.7.29 கோடியில் புதிய பேருந்து நிலையம்

கும்மிடியில் ரூ.7.29 கோடியில் புதிய பேருந்து நிலையம்

ADDED : செப் 26, 2025 03:54 AM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், 7.29 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது .

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

புதிய பேருந்து நிலையம் அமைக்க, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், பெத்திக்குப்பம் பகுதியில், சர்வே எண்: 173/1ஏ1ல், 1.80 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7.29 கோடி ரூபாய் செலவில் அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

கட்டுமான பணிகளுக் கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில், சுற்றுச் சுவருடன் ஒரே நேரத்தில், 17 பேருந்துகள் நிற்கும் வசதி, காத்திருப்போர் அறைகள், நேர காப்பாளர் அறை, உதவி மையம், 17 கடைகள் கொண்ட வணிக வளாகம், டூ - வீலர், ஆட்டோ மற்றும் கார்களுக்கான தனி பார்க்கிங் வசதி, பெண்கள் பாழுட்டும் அறை, கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

பேருந்து நிலைய பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us