/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயிலில் 'ஓசி' பயணம் ரூ.6.25 கோடி அபராதம் ரயிலில் 'ஓசி' பயணம் ரூ.6.25 கோடி அபராதம்
ரயிலில் 'ஓசி' பயணம் ரூ.6.25 கோடி அபராதம்
ரயிலில் 'ஓசி' பயணம் ரூ.6.25 கோடி அபராதம்
ரயிலில் 'ஓசி' பயணம் ரூ.6.25 கோடி அபராதம்
ADDED : அக் 02, 2025 10:43 PM
சென்னை :சென்னை ரயில் கோட்டத்தில், கடந்த மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.21 லட்சம் பேரிடமிருந்து, 6.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தலைமையில், கடந்த 30ம் தேதி சிறப்பு டிக்கெட் சோதனை நடந்தது. சோதனையின் போது, உரிய டிக்கெட் இன்றி பயணித்த, 3,254 பேரிடம், 18.22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை கோட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும், டிக்கெட் இன்றி பயணித்த ஒரு லட்சத்து, 21,189 பேரிடம் இருந்து, 6.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகை, ஒரே மாதத்தில் ஈட்டப்பட்ட அதிகபட்ச அபராத வருவாய்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


