ADDED : அக் 22, 2025 10:39 PM

பொதட்டூர்பேட்டை: வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த நபர், பாம்பு கடித்து உயிரிழந்தார்.
பொதட்டூர்பேட்டை, நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 56. இவர், பொதட்டூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, அவரது கழுத்தில் ஏதோ கடித்துள்ளது.
கணேசனின் அலறல் சத்தம் கேட்டு வந்த மகன், அருகில் இருந்த பாம்பை அடித்து கொன்றார்.
பின், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கணேசனை அழைத்து சென்றார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.


