ADDED : பிப் 10, 2024 08:46 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 204 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
அந்த பள்ளிக்கு கலையரங்கம் தேவை என, பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்று, ஊராட்சி தலைவர் சுசிலாவும், ஒன்றிய கவுன்சிலர் ரவிகுமாரும் இணைந்து, 7.50 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் ஒன்றை நிறுவினர்.
கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் நேற்று கலையரங்கத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில், சேர்மன் சிவகுமார், துணை சேர்மன் மாலதி முன்னிலை வகித்தனர்.