/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புதுவாயல் சந்திப்பில் நிழற்குடை இல்லாமல் பயணியர் தவிப்புபுதுவாயல் சந்திப்பில் நிழற்குடை இல்லாமல் பயணியர் தவிப்பு
புதுவாயல் சந்திப்பில் நிழற்குடை இல்லாமல் பயணியர் தவிப்பு
புதுவாயல் சந்திப்பில் நிழற்குடை இல்லாமல் பயணியர் தவிப்பு
புதுவாயல் சந்திப்பில் நிழற்குடை இல்லாமல் பயணியர் தவிப்பு
ADDED : பிப் 24, 2024 10:12 PM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில், ஆந்திரா, சென்னை மற்றும் பெரியபாளையம் நோக்கி செல்லும் மூன்று சாலைகள் சந்திக்கின்றன. சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், பள்ளி, கல்லுாரி செல்வோர், வியாபாரிகள், தொழிலாளர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பேருந்து பயணியர், மூன்று திசை சாலைகளிலும் காத்திருந்து பேருந்து ஏறி, இறங்கி செல்வது வழக்கம்.
பரபரப்பாக காணப்படும் அந்த சந்திப்பில், பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள், அங்குள்ள கடைகளின் கூரைகளின் கீழ் காத்திருக்கின்றனர். இடம் கிடைக்காதவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்கின்றனர். பேருந்து பயணியரின் நலன் கருதி, அந்த இடத்தில் பயணியர் நிழற்குடை நிறுவ வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.