/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம் தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உத்சவம் துவக்கம்
ADDED : செப் 30, 2025 11:58 PM
திருவள்ளூர்:தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உத்சவம் நாளை துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
திருவள்ளூர், திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உத்சவம் நாளை துவங்கி, தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
தினமும் காலை 8:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு மேல், தீர்த்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். யாகசாலையில், இரு வேளைகளிலும், மண்டப பூஜை, வேதிகார்ச்சனம், மண்டல ஆராதனம், யாக வேள்வி, பவித்ர சமர்ப்பணம் மற்றும் பூர்ணாஹூதி நடைபெறும்.
வரும், 6ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, அதிரச அலங்காரம் மற்றும் இரவு 9:00 மணிக்கு மேல், பவித்ர உத்சவம் நிறைவு விழா மற்றும் பூர்ணாஹூதி நடைபெறும்.


