/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புதுமாப்பிள்ளை தற்கொலை உறவினர்கள் சாலை மறியல் புதுமாப்பிள்ளை தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
புதுமாப்பிள்ளை தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
புதுமாப்பிள்ளை தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
புதுமாப்பிள்ளை தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
ADDED : செப் 26, 2025 03:59 AM

செவ்வாப்பேட்டை:திருமணமாகி, 20 நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மனைவியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சி.டி.எச்., ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 37. தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் , தன் உறவினராகன புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, 25 என்பவரை கடந்த 4ம் தேதி திருமணம் செய்தார்.
திருமணம் ஆன 2-வது நாளே தம்பதியிடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தன் வீட்டில் துாக்கில் தொங்கியபடி கார்த்திகேயன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று காலை கார்த்திகேயன் உடலுடன் செவ்வாப்பேட்டை பகுதியில் அவரது உறவினர்கள், கார்த்திகேயனை தற்கொலைக்கு துாண்டிய அவரது மனைவியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமென சமாதான பேச்சு நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.