/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்
மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்
மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்
மீட்கப்பட்ட அரசு நிலம் தானமாக வழங்க தீர்மானம்
ADDED : பிப் 01, 2024 08:06 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகில், மீட்கப்பட்ட 51 சென்ட் நிலத்தை, பள்ளி கட்டடம் கட்ட, தானமாக வழங்க கோரி, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் நகர மன்ற கூட்டம், தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஆணையாளர்-பொறுப்பு நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் சமீபத்தில் வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த இடத்தில், பள்ளி கட்டடம் கட்டுவதற்காக, நகராட்சிக்கு தானமாக வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


