/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க உத்தரவு சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க உத்தரவு
சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க உத்தரவு
சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க உத்தரவு
சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஜூன் 12, 2025 02:56 AM

கும்மிடிப்பூண்டி:சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய்கண்டிகை மற்றும் மாநெல்லுார் சிப்காட் வளாகங்களை இணைக்கும் முக்கிய சாலையாக, கவரைப்பேட்டை - சத்தியவேடு நெடுஞ்சாலை உள்ளது.
மேற்கண்ட சிப்காட் வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால் அதற்கான சாலை போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அந்த சாலையில் தற்போது எஞ்சியுள்ள பூவலம்பேடு திடீர் நகர் முதல் தாணிப்பூண்டி சந்திப்பு வரையிலான சாலையில் விரிவாக்க பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையின் சென்னை கண்காணிப்பு பொறியாளர் சரவணசெல்வன், நேற்று பணிகளை ஆய்வு செய்தார். விரிவாக்க பணிகளின் தற்போதைய நிலை, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்து சென்றார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்ட பொறியாளர் டி சிற்றரசு, கும்மிடிப்பூண்டி உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி, உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.