/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆர்.வி.என்.கண்டிகை மக்கள் குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு ஆர்.வி.என்.கண்டிகை மக்கள் குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு
ஆர்.வி.என்.கண்டிகை மக்கள் குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு
ஆர்.வி.என்.கண்டிகை மக்கள் குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு
ஆர்.வி.என்.கண்டிகை மக்கள் குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு
ADDED : ஜூன் 20, 2025 09:13 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் ஆர்.வி.என்.கண்டிகை கிராமத்தில், 240க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக, ஊராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, தெருக்குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த 20 நாட்களாக ஆர்.வி.என். கண்டிகை கிராமத்தில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குடிநீர் பிரச்னை குறித்து ஆர்.வி.என்.கண்டிகை மக்கள், திருத்தணி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை ஆர்.வி.என்.கண்டிகையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனை நேரில் சந்தித்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்தனர்.
மனுவை பெற்ற எம்.எல்.ஏ., “விரைவில் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி, குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்றார்.