/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கும்மிடியில் குப்பை எரிப்பு; புகை மண்டலமான சாலைகும்மிடியில் குப்பை எரிப்பு; புகை மண்டலமான சாலை
கும்மிடியில் குப்பை எரிப்பு; புகை மண்டலமான சாலை
கும்மிடியில் குப்பை எரிப்பு; புகை மண்டலமான சாலை
கும்மிடியில் குப்பை எரிப்பு; புகை மண்டலமான சாலை
ADDED : பிப் 11, 2024 11:25 PM

கும்மிடிப்பூண்டி : சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் அருகே ஈசா பெரிய ஏரிக்கரையை ஒட்டி, 200 மீட்டர் தொலைவிற்கு, எப்போதும் டன் கணக்கில் குப்பை குவியல் காணப்படும். கேட்பாரற்ற இடமாகி போனதால், அந்த இடத்தில் சுற்றியுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள், குப்பையை குவித்து வருகின்றன. அதனால் அப்பகுதியில் எப்போதும் கடுமையான துர்நாற்றம் வீசும்.
குறிப்பிட்ட அளவு குப்பை சேர்ந்ததும், அதை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுதும் மாசு கலந்த புகை மண்டலமாக மாறுகிறது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட காரணமாக இருக்கிறது.
மேலும், எரியூட்டப்படும் குப்பையில் இருந்து கிளம்பும் சாம்பல் துகள்கள், அருகில் உள்ள ஏரி நீரில் கலக்கிறது. 'கழிவுகளை கொட்டாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், எச்சரிக்கை பலகை வைத்தும் எந்த பயனும் இல்லை. இரு துறையினரும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், குப்பை குவிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பை குவித்து எரிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.