/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிறு வணிக கடன் முகாம்புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிறு வணிக கடன் முகாம்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிறு வணிக கடன் முகாம்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிறு வணிக கடன் முகாம்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிறு வணிக கடன் முகாம்
ADDED : ஜன 27, 2024 11:17 PM
திருவள்ளூர், 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க, கூட்டுறவு வங்கியில், 'சிறப்பு சிறு வணிக கடன் திட்டம்' முகாம் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'மிக்ஜாம்' புயலால், தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள், பூ, காய்கறி வியாபாரம் செய்வோர், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அவர்களுக்கு மீண்டும் தொழில் புரிய 4 சதவீத குறைந்த வட்டியில், 'முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம்' முகாம், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் திருவள்ளூர் நகர கூட்டுறவு வங்கியில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், சிறப்பு சிறு வணிக கடன், குறைந்த வட்டியில், 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது.
வாரம் 200 ரூபாய் வீதம், 50 வாரங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். அல்லது மாதம் 1,000 ரூபாய் வீதம் செலுத்தலாம்.
மேலும், தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலும், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோர், விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக, காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் - 77081 08505, திருவள்ளூர் நகர கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் 95008 93335 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.