/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 444 மனுக்கள் ஏற்பு 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 444 மனுக்கள் ஏற்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 444 மனுக்கள் ஏற்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 444 மனுக்கள் ஏற்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 444 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 04, 2025 02:36 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை பகுதியில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 187 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட 444 மனுக்கள் ஏற்கப்பட்டன.
கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் தொடுகாடு, உளுந்தை ஆகிய இரு ஊராட்சி பகுதிக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது.
கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவுந்தரி, நடராஜன் ஆகியோர் தலைமையில் நடந்த முகாமில் திருவள்ளூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் மனுக்களை பெற்றார். முகாமில் 187 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட 444 மனுக்கள் பெறப்பட்டன.