/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 600 பேர் விண்ணப்பம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 600 பேர் விண்ணப்பம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 600 பேர் விண்ணப்பம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 600 பேர் விண்ணப்பம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 600 பேர் விண்ணப்பம்
ADDED : செப் 14, 2025 03:00 AM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், 600 பேர் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 20 மற்றும் 21 ஆகிய இரண்டு வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமை வகித்தார்.
இந்த முகாமில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, அப்பகுதி மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம், திருத்தம் உட்பட, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க கோரி, மொத்தம் 600 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், 10 பயனாளிகளின் மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.