/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீஞ்சூரில் டேங்கர் லாரி வெடித்து விபத்து வெல்டிங் பணியின் போது விபரீதம் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் 'அட்மிட்' மீஞ்சூரில் டேங்கர் லாரி வெடித்து விபத்து வெல்டிங் பணியின் போது விபரீதம் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் 'அட்மிட்'
மீஞ்சூரில் டேங்கர் லாரி வெடித்து விபத்து வெல்டிங் பணியின் போது விபரீதம் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் 'அட்மிட்'
மீஞ்சூரில் டேங்கர் லாரி வெடித்து விபத்து வெல்டிங் பணியின் போது விபரீதம் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் 'அட்மிட்'
மீஞ்சூரில் டேங்கர் லாரி வெடித்து விபத்து வெல்டிங் பணியின் போது விபரீதம் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் 'அட்மிட்'
ADDED : செப் 24, 2025 03:32 AM

மீஞ்சூர்:விரிசலை சரிசெய்வதற்காக, டேங்கர் லாரியில் வெல்டிங் வைத்த போது, திடீரென வெடித்ததால், அத்திப்பட்டு புதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய முனையங்கள் உள்ளன. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, டேங்கர் லாரிகள் மூலம் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
பயங்கர சத்தம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 45. இவருக்கு சொந்தமான டேங்கர் லாரி, பாரத் நிறுவனத்திற்கு பெட்ரோல் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
நேற்று காலை, டேங்கர் லாரியில் ஏற்பட்டிருந்த விரிசலை சரிசெய்வதற்காக, அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பட்டறையில் வெல்டிங் பணி மேற்கொள்ளப்பட்டது. லாரியில் பெட்ரோலிய பொருட்கள் ஏதும் இன்றி காலியாக இருந்தது.
ஆனால், வெல்டிங் வைத்த போது உஷ்ணம் அதிகரித்து, திடீரென டேங்கரின் மேல் பகுதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்த இரும்பு தளவாடங்கள் தனித்தனியாக சிதறி விழுந்தன.
இதனால், அருகில் இருந்த கட்டடங்களும் அதிர்வடைந்தன. அருகே இருந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து ஓடினர். வெல்டிங் தொழிலாளி மற்றும் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
மேலும், அருகில் இருந்த உணவகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், அதிர்ச்சியில் மயங்கியதை தொடர்ந்து, மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதிர்வு
உணவகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் 'மாருதி டிசயர்' கார் ஒன்றும் அதிர்வில் சேதமாகின. 'ஐ.ஓ.சி.எல்., ஹிந்துஸ்தான், பாரத் என, பல்வேறு நிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் எரிவாயு முனையங்கள் இங்குள்ளதால், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நேரிடுவதை தவிர்க்க, வெல்டிங் பட்டறைகளை கண்காணித்து, அவர்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.