/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல் கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்
கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்
கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்
கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்
ADDED : அக் 08, 2025 02:34 AM

திருமழிசை:திருமழிசை குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
திருமழிசை பேரூராட்சி அலுவலகம் அருகே ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள தெற்கு மாடவீதி சாலை பல இடங்களில் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகு தி மக்கள், பள்ளி மாணவ- - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அருகிலேயே பேரூராட்சி அலுவலகம் இருந்தும், சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


