/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆரம்ப சுகாதார நிலைய முகப்பில் கூரை இல்லை மெதுாரில் மழை, வெயிலில் நோயாளிகள் தவிப்பு ஆரம்ப சுகாதார நிலைய முகப்பில் கூரை இல்லை மெதுாரில் மழை, வெயிலில் நோயாளிகள் தவிப்பு
ஆரம்ப சுகாதார நிலைய முகப்பில் கூரை இல்லை மெதுாரில் மழை, வெயிலில் நோயாளிகள் தவிப்பு
ஆரம்ப சுகாதார நிலைய முகப்பில் கூரை இல்லை மெதுாரில் மழை, வெயிலில் நோயாளிகள் தவிப்பு
ஆரம்ப சுகாதார நிலைய முகப்பில் கூரை இல்லை மெதுாரில் மழை, வெயிலில் நோயாளிகள் தவிப்பு
ADDED : செப் 25, 2025 01:51 AM

பொன்னேரி:மெதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பில் கூரை இல்லாததால், மழை, வெயிலில் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த மெதுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் 250 - 300 புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மாதத்திற்கு, 400க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுகின்றனர்.
கர்ப்பிணியர், மகப்பேறுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள், அவர்களின் உதவியாளர்கள், புறநோயாளிகள், அவசர சிகிச்சைக்கு வருவோர் என, ஆரம்ப சுகாதார நிலையம் எப்போதும் நெரிசலுடன் காணப்படும்.
மருத்துவ பயனாளிகளுக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், அவர்கள் நுழை வாயிலின் முகப்பிலும், படிக்கட்டுகளிலும் அமர்ந்திருக்கும் நிலை உள்ளது.
மழைக்காலங்களில் மழைச்சாரல், சுகாதார வளாகத்தில் விழுகிறது. வெயில் காலங்களிலும் சிரமம் ஏற்படுகிறது.
சுகாதார வளாகத்தின் முகப்பு பகுதியில் கூரை அமைத்து, போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என, மருத்துவ பயனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகு றித்து, மெதுாரை சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.பி.சேக ர் கூறியதாவது:
கடந்த 2021ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, 75 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டது. அதன்பின், இதுவரை அங்கு கூடுதல் வசதிகள் ஏ தும் ஏற்படுத்தப்படாம ல் உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பில் கூரை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.