ADDED : ஜூலை 01, 2025 09:29 PM
திருத்தணி:நந்தியாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருத்தணி பகுதியில் செல்லும் நந்தியாற்றில் சிலர், அனுமதியின்றி டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தி செல்கின்றனர். நேற்று அதிகாலை திருத்தணி போலீசார், தெக்களூர் ஏரிக்கரை அருகே செல்லும் நந்தியாற்றில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், போலீசார் வருவதை கண்டு தப்பியோடினர். தொடர்ந்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.