/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜவுளி பூங்காவுக்கு எதிர்ப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம் ஜவுளி பூங்காவுக்கு எதிர்ப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்
ஜவுளி பூங்காவுக்கு எதிர்ப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்
ஜவுளி பூங்காவுக்கு எதிர்ப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்
ஜவுளி பூங்காவுக்கு எதிர்ப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 21, 2025 12:53 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே அமைக்கப்பட்டு வரும் சிறிய அளவிலான ஜவுளி பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுதிவாசிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டனர். போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.
பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கம்பேட்டை பகுதியில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஜவுளி பூங்கா அமைப்பதால், நெடியம் ஊராட்சியில் நிலத்தடி நீர் பாதிக்க கூடும் என, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நெடியம் ஊராட்சியைச் சேர்ந்த பகுதிவாசிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான பள்ளிப்பட்டு போலீசார், அவர்களுடன் பேச்சு நடத்தினர். இதுதொடர்பாக, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சமரச பேச்சு நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பகுதிவாசிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.