Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வயிற்றுப்போக்கால் 30 பேர் பாதிப்பு சுகாதார துறை நடவடிக்கை எடுக்குமா?

வயிற்றுப்போக்கால் 30 பேர் பாதிப்பு சுகாதார துறை நடவடிக்கை எடுக்குமா?

வயிற்றுப்போக்கால் 30 பேர் பாதிப்பு சுகாதார துறை நடவடிக்கை எடுக்குமா?

வயிற்றுப்போக்கால் 30 பேர் பாதிப்பு சுகாதார துறை நடவடிக்கை எடுக்குமா?

ADDED : ஜூன் 20, 2025 08:13 PM


Google News
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சக்கரமநல்லூர் கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், 10 நாட்களாக 30க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, தலைவலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானோர் திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து சக்கரமநல்லூர் கிராம மக்கள் கூறியதாவது:

கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மை செய்வதில்லை. நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரகலாதன் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பகுதியில் குடிநீரின் தரம். ஏப்ரல் மாதம் தான் ஆய்வு செய்யப்பட்டது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. சம்பந்தப்பட்ட கிராமத்தில், சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், இறைச்சி உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனால், ஐந்து பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றப்படி நோய் பரவல் எதுவும் இல்லை. சக்கரமநல்லூர் கிராமத்தில் சுகாதார துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் மருத்துவ முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us