/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ போலீஸ் ஏட்டுடன் பழகிய பெண் வெட்டிக்கொலை போலீஸ் ஏட்டுடன் பழகிய பெண் வெட்டிக்கொலை
போலீஸ் ஏட்டுடன் பழகிய பெண் வெட்டிக்கொலை
போலீஸ் ஏட்டுடன் பழகிய பெண் வெட்டிக்கொலை
போலீஸ் ஏட்டுடன் பழகிய பெண் வெட்டிக்கொலை
ADDED : செப் 16, 2025 12:41 AM

துாத்துக்குடி; போலீ ஸ் ஏட்டுடன் நெருங்கிப் பழகிய பெண், வீட்டில் தனியாக இருந்தபோது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
துாத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து திரேஸ் நகரை சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரி, 37. இவர், துாத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் ஒருவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.
இதனால், ராமசுப்பு கோபித்துக் கொண்டு கர்நாடகாவில் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த பிரச்னை ஏட்டு மனைவிக்கு தெரியவந்ததால், அவர் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சக்தி மகேஸ்வரியுடன் பழகுவதை நிறுத்துமாறு ஏட்டு மனைவி மற்றும் மகன் கூறியுள்ளனர். இதேபோல, ஏட்டுடன் பழகுவதை நிறுத்துமாறு, சக்தி மகேஸ்வரியிடமும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சக்தி மகேஸ்வரி நேற்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தாளமுத்துநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். கொலை தொடர்பாக ஏட்டு மகனான 15 வயது இளம் சிறார், அவரது நண்பரான 16 வயது இளம் சிறார் ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.