/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ சாலையில் 'ஒற்றை கொம்பன்' யானை வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் சாலையில் 'ஒற்றை கொம்பன்' யானை வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்
சாலையில் 'ஒற்றை கொம்பன்' யானை வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்
சாலையில் 'ஒற்றை கொம்பன்' யானை வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்
சாலையில் 'ஒற்றை கொம்பன்' யானை வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்
ADDED : ஜூலை 31, 2024 01:15 AM
ஆலங்காயம்:திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அருகே வனப்பகுதியை ஒட்டிய தீர்த்தம் பகுதி சாலையில் நேற்று காலை, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல் சென்று வந்தனர். அப்போது, 'ஒற்றை கொம்பன்' என அழைக்கப்படும் ஒற்றை தந்தம் கொண்ட யானை, அந்த சாலை நடுவே, கம்பீரமாக நடந்து வந்தது.
இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, வந்த வழியே திரும்பினர். யானையை சில இளைஞர்கள் வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பினர். ஒற்றை கொம்பன் யானை நின்ற சாலை, ஆலங்காயத்தில் இருந்து வேலுார் செல்லும் பிரதான சாலை என்பதால், போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
யானை ஒரு வாரத்துக்கு முன் ஆம்பூர், கீழ் முருங்கை, பனங்காட்டேரி ஆகிய பகுதிகளில், நான்கு நாட்கள் முகாமிட்டு பொதுக்களை அச்சுறுத்தி வந்தது. தற்போது மீண்டும் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வனப்பகுதியை ஒட்டிய தீர்த்தம் சாலையில் கம்பீரமாக சுற்றி வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.