ADDED : ஜூலை 14, 2024 11:31 PM

கருவலுாரில் உள்ள திருமுருகன் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தினர், ரத்ததான முகாம் நடத்தினர்.
சேர்மன் கருப்பசாமி, நிர்வாக இயக்குனர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். பாரத் ரீ இன்சூரன்ஸ் நிறுவன பொது மேலாளர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவிநாசி இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உரிய மருத்துவ பரிசோதனை செய்து முகாமை நடத்தினர். ஊராட்சி தலைவர்கள் முருகன், மயில்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்காக, 136 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.