ADDED : ஜூன் 30, 2024 01:03 AM
திருப்பூர்:காங்கயத்தில், திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு கைதிகளை கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்து ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், முசிறி சப்-டிவிஷன், ஜம்பு நாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு தொடர்பாக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பேரை, திருச்சி மாவட்டம், முசிறி சப் டிவிஷன், ஜம்புநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக தொட்டியம் ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்த நேற்றுமுன்தினம் போலீசார் அழைத்து சென்றனர்.
கோர்ட் விசாரணைக்கு பின், திருச்சியில் இருந்து கோவைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம், ஒத்தக்கடை அருகே சென்ற போது, முட்டை லோடு ஏற்றி சென்ற வாகனம் திடீரென நடுரோட்டில் நின்றது. அப்போது, பின்னால் வந்த போலீஸ் வாகனம், சரக்கு வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
வாகனம் மட்டும் சேதமடைந்தது. உடனே, திருப்பூர் மாவட்ட போலீசார் மாற்று வாகனம் ஏற்பாடு செய்தனர். அந்த வாகனத்தில், மூன்று பேரும் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.