ADDED : ஜூலை 29, 2024 01:33 AM
அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளராக இருந்தவர், மாரியப்பன், 59.
பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, கடந்த, மே, 30ம் தேதி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். டிரைவர், நடத்துனர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கோவை கோட்ட தொழில்நுட்ப மேலாளர் செல்வக்குமார், திருப்பூர் மண்டல பொது மேலாளராக தற்காலிக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், சென்னை, 2, விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) துணை மேலாளராக இருந்த சிவக்குமார், திருப்பூர் மண்டல பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திருப்பூர் மண்டலத்துக்கு கீழ் உள்ள திருப்பூர் 1 மற்றும் 2 கிளை, பல்லடம், காங்கயம், உடுமலை, பழநி, 1, பழநி 2, தாராபுரம் ஆகிய எட்டு கிளைகளை நிர்வகிப்பார்.