ADDED : ஜூலை 14, 2024 11:19 PM
திருப்பூர்;சிகரங்கள் அறக்கட்டளை, தி ஜெயவேல் இம்பெக்ஸ் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனைக்கான ரத்த தானம் முகாம் உடுமலை, உடுக்கம்பாளையம் பள்ளியில் நடந்தது. 40 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. பொள்ளாச்சி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மூலம், 81 பேருக்கு கண் சிகிச்சை பரிசோதனை மேற்கொண்டு, ஆறு பேர் புரை நீக்க இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ரேவதி மருத்துவமனையின் இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் மூலம், 82 பேர் பங்கேற்று, உடல் பரிசோதனை செய்தனர். 20 பேருக்கு இலவசமாக இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது.
ரத்த தானம் அளித்து பங்கேற்றவர்களுக்கு சிகரங்கள் அறக்கட்டளை தலைவர் காமராஜ், கிராம மக்களுக்கு தி ஜெயவேல் இம்பெக்ஸ் அமைப்பு தங்கவேல் பழனிசாமி பதக்கம், சான்றிதழுடன் மரக்கன்று வழங்கி கவுரவித்தனர்.