ADDED : ஜூலை 29, 2024 03:20 AM

பல்லடம்;மத்திய பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில், காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் கோபி பேசியதாவது: நாடு வளர்ச்சி பெற விவசாயம், ஜவுளி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவை சார்ந்த திட்டங்கள் மிக முக்கியமானவை. இத்திட்டங்கள் குறித்து மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகம் என்ற பெயர் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. விரைவில், தேர்தல் வராமலேயே மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்கும்
இவ்வாறு, அவர் பேசினார். நிர்வாகிகள், சதாசிவம், மணிராஜ், நரேஷ் குமார், சுந்தரி, உத்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
----
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.