ADDED : ஜூலை 28, 2024 10:52 PM

திருப்பூரில் உள்ள தொழில் பாதுகாப்பு குழு அலுவலகத்தில் நேற்று பாரதிய மஸ்துார் சங்க(பி.எம்.எஸ்.,) புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், அகில பாரத கணக்கு தணிக்கை பிரிவு பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மாநில துணை தலைவர் பிரபு, மாவட்ட செயலாளர் மாதவன், செயல் தலைவர் செந்தில், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்கச் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
---
பி.எம்.எஸ்., மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக்கூட்டத்தில் பங்கேற்றோர்.