Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு; ஒவ்வொரு தாய்மார்களின் கடமை

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு; ஒவ்வொரு தாய்மார்களின் கடமை

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு; ஒவ்வொரு தாய்மார்களின் கடமை

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு; ஒவ்வொரு தாய்மார்களின் கடமை

ADDED : ஜூலை 01, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
''குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை'' என, பல்லடம் 'வனம்' அமைப்பின் வான்மழை கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

பல்லடம் 'வனம்' அமைப்பின் வான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனாலயம் வளாகத்தில் நடந்தது. தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

வைட்டமின் 'டி' குறைபாடு


கோவை அனன்யா ஷெல்டர்ஸ் நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி பேசியதாவது:

இன்றுள்ள குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதித்தால், அதில், வைட்டமின் 'டி' குறைபாடு அதிகம் உள்ளது. மற்ற நாடுகளைப் போன்று இல்லாமல், சூரிய கதிரின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும் நமது நாட்டில் இக்குறைபாடு உள்ளதுதான் கவலை அளிக்கிறது.

வீட்டிலேயே காய்கறிகள்


ஒரு தாயாய் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை சிந்திக்க வேண்டி உள்ளது. டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்றைய தலைமுறைகள் சிந்தித்து வரும் நிலையில், நல்ல காற்று, சுகாதாரமான தண்ணீர் வேண்டும் என கேட்கும்படியாக இன்றைய சூழல் மாறி வருவது வேதனைப்படும்படியாக உள்ளது. எனவே, நம்மால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இயற்கையான முறையில் வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்து பயன்படுத்துங்கள்.

ஆரோக்கியம் அவசியம்


அன்னையர்கள் நினைத்தால் எதுவும் முடியும். தாய் சொன்னால் கேட்காதவர்கள் யாரும் இல்லை. ஒரு குடும்பத்தின் மாற்றம் சமுதாயத்தின் மாற்றமாகும். சமுதாயம் மாறினால் நாடும் வளர்ச்சி பெறும்.

நல்ல விஷயங்களுக்கு பலரும் ஆதரவு அளித்தாலே அது பெரிய இயக்கமாக மாறும். நல்ல ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை.

ஒரு குழந்தை பிறந்து ஆரோக்கியமாக, திறமையானவர்களாக வளர, இன்றைய தாய்மார்கள் எத்தனையோ முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால், அனைவராலும் இதில் வெற்றி பெற முடிவதில்லை. குழந்தைகளுக்கு குளிக்க, பல் துலக்க சொல்லிக்கொடுப்பதுபோல், தினசரி யோகா செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். ஏனெனில், வேகமாக செல்லும் இந்த உலகில், குழந்தைகள் ஒரு நிமிடம் சிந்திக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக, மொழிபெயர்ப்பாளர் விஜய குமார் சிறப்புரை ஆற்றினார். வனம் அமைப்பின் பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

குழந்தைகளுக்கு குளிக்க, பல் துலக்க

சொல்லிக்கொடுப்பதுபோல், தினசரி யோகா செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். ஏனெனில், வேகமாக செல்லும் இந்த உலகில், குழந்தைகள் ஒரு நிமிடம்

சிந்திக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us