/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவில் நுழைவுக்கட்டணம் ஹிந்து பாரத் சேனா எதிர்ப்பு கோவில் நுழைவுக்கட்டணம் ஹிந்து பாரத் சேனா எதிர்ப்பு
கோவில் நுழைவுக்கட்டணம் ஹிந்து பாரத் சேனா எதிர்ப்பு
கோவில் நுழைவுக்கட்டணம் ஹிந்து பாரத் சேனா எதிர்ப்பு
கோவில் நுழைவுக்கட்டணம் ஹிந்து பாரத் சேனா எதிர்ப்பு
ADDED : ஜூலை 29, 2024 12:19 AM

திருப்பூர்;கோவில்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்ய வேண்டும்; தமிழக அரசு உயர்த்திய பத்திரப்பதிவு கட்டணம், மின் கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும்.
முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த ஒரு நபர் கமிஷன் பரிந்துரைகள் நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், குமரன் சிலை முன்புறம், ஹிந்து பாரத் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயல் தலைவர் பாலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜ், பொதுச்செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஜெய்மணி மாறன், குணசேகரன், மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். இதில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.